விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து; நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்..!
Seithipunal Tamil February 06, 2025 09:48 AM

விருதுநகர் மாவட்டம், கன்னிசேரி புதூரில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில்,விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு ரூ.04 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " பட்டாசு ஆலை வெடி விபத்தில் ராமலட்சுமி பலியான செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

வெடிவிபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 06 பேருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு ரூ.04 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.