சென்னை கிளாம்பாக்கத்தில் ஆட்டோவில் இளம்பெண்ணை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் ஆட்டோ ஓட்டுநர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே, இளம் பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் முத்தமிழ்ச்செல்வன், தயாளன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள தயாளன் சரித்திர பதிவேடு குற்றவாளி என விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 3ம் தேதி இச்சம்பவம் நடைபெற்ற நிலையில், குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னையில், ஆட்டோவில் இளம்பெண்ணை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.