8-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர்! ஆந்திராவில் அதிர்ச்சி
Top Tamil News February 06, 2025 11:48 PM

அனகப்பள்ளி மாவட்டத்தில் 8 ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலம் அனகபள்ளி மாவட்டத்தில் வத்தடி கிராமத்தில்  என்.டி.எஸ் எனும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் பிரசாத் என்பவர் பாலியல் வன்கொடுமைக்கு செய்துள்ளார். இதனால் கடும் வயிற்றுவலி ஏற்பட்டதை அடுத்து, சிறுமி வீட்டிற்குச் சென்று தனது பெற்றோரிடம் நடந்த கொடுமையைப் பற்றிக் கூறினாள். இதனால் கோபமடைந்த பெற்றோர் பள்ளிக்குச் சென்று ஆசிரியரை சாலைக்கு இழுத்து வந்து மின் கம்பத்தில் கட்டி வைத்து உதைத்தனர். அப்போது தனக்கு எதுவும் தெரியாது என்று பிரசாத் கூற முயன்றார்.  

பின்னர் சிறுமியின் பெற்றோர் ஆசிரியரிடம் குழந்தை எல்லாவற்றையும் சொல்லிவிட்டதாகவும், தான் செய்த குற்றத்தை  ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும்  கூறி தாக்கியுள்ளானர். பள்ளியில் பெண் மாணவிகளின் பாதுகாப்புப்பற்றி  கவலையாக இருப்பதாகவும், இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர் கேட்டு கொண்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆசிரியரை பிடித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.