தமிழகத்தை உலுக்கிய மாணவி பலாத்காரம்… “அந்த 3 சார்கள் இவர்கள்தான்”… வழக்கறிஞர்கள் சங்கம் எடுத்த அதிரடி முடிவு..!!!
SeithiSolai Tamil February 07, 2025 02:48 AM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி அருகே ஒரு அரசு பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவி கடந்த ஒரு மாத காலமாக பள்ளிக்கு செல்லாததால் தலைமை ஆசிரியர் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளார்.அப்போது மாணவியின் பெற்றோர் தங்கள் மகள் கர்ப்பமாக இருந்ததாகவும் கருக்கலைப்பு செய்து மருத்துவமனைக்கு அலைவதாகவும் கூறியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் அந்த பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களான பிரகாஷ், ஆறுமுகம், சின்னசாமி ஆகியோர்தான் மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கியது தெரியவந்தது.

இவர்கள் மூவரையும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதன் தாக்கமே அடங்காத நிலையில் அரசு பள்ளியில் சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில்தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளது. அதாவது கைதான ஆசிரியர்களுக்கு ஆதரவாக யாரும் வாதாட போவதில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.