“போலீஸ் SI-ஐ அடித்தே கொன்ற மகன்”… “சரமாரியாக தாக்கியதில் தாடை உடைந்து பலத்த காயம்”… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!
SeithiSolai Tamil February 07, 2025 04:48 AM

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கத்தில் விஜயபாஸ்கர்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை விமான நிலையத்தில் SPCID பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயபாஸ்கர் வீட்டிற்கு வராமல் தனது தாய் வீட்டில் தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் கடந்த 25ம் தேதி விஜயபாஸ்கர், மாற்றும் அவரது மகனான சுகாஸ்(21) ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், சுகாஸ் தனது கையால் அவரது தந்தையை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் விஜயபாஸ்கரின் தாடை உடைந்து காதிலிருந்து இரத்தம் வந்துள்ளது. இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இதற்கிடையே சுகாஸை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயபாஸ்கர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.