கட்சி தொடங்கியவுடன் முதலமைச்சர் ஆசையா? மக்களிடம் இதெல்லாம் எடுபடாது- மு.க.ஸ்டாலின்
Top Tamil News February 07, 2025 04:48 AM

நெல்லையில் ரூ.66.04 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பின்னர்  மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி  நடைபெற்றது. 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலியில் மாற்று கட்சியினர் ஆயிரம் பேர் இணையும் நிகழ்ச்சியில் தற்போது கலந்து கொண்டுள்ளார். முன்னாள் பாஜக மாவட்ட தலைவர் தயா சங்கர், பாஜக முன்னாள் பொதுச் செயலாளர் வேல் ஆறுமுகம் மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளர் என ஆயிரம் பேர் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சிலர் கட்சி தொடங்கியதும் முதலமைச்சர் ஆகவும் ஆட்சிக்கு வரவும் ஆசைப்படுகிறார்கள். அதெல்லாம் மக்களிடம் எடுபடாது, மக்களுக்கு நன்றாக தெரியும். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடும் இயக்கம் திமுக. யார் மக்கள் பணியாற்றுவார்கள்? யார் மக்களுக்கு தொண்டாற்றுவார்கள் என்பது மக்களுக்கு தெரியும். ஒட்டுமொத்த தமிழினத்துக்காக திமுக என்றும் பாடுபடும். 7-வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் என்பதை மக்கள் முடிவு செய்துள்ளார்கள்” என்றார்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.