சென்னையில் அதிமுக புள்ளிக்கு அரிவாள் வெட்டு! பெரும் பதற்றம்!
Seithipunal Tamil February 07, 2025 08:48 AM

சென்னை: ஆவடி அருகே அதிமுக வட்டச் செயலாளர் ராஜசேகர் மீது மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதில் அவர் படுகாயங்களுக்கு உள்ளாகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இரவு 9 மணியளவில், திருமுல்லைவாயல் சிவன் கோவில் அருகே, தனது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்த ராஜசேகரை அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென தாக்கினர். 

அரிவாளால் தொடர்ந்து வெட்டிய மர்ம நபர்கள், பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றனர். தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்த ராஜசேகரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். 

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி, தாக்குதல் மேற்கொண்ட நபர்கள் யார்? ஏன் இந்த தாக்குதல் நடந்தது? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விரைவில் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.