இதை படிச்சா நகம் கடிக்கும் பழக்கத்தை இப்பவே விடுவீங்க
Top Tamil News February 07, 2025 11:48 AM

பொதுவாக  அதிக மன அழுத்தம் உள்ளோருக்கு நகம் கடிக்கும்  பழக்கம் இருப்பதாக ஆய்வு கூறுகிறது .சிலர் எப்போதாவது ஏதோ ஒன்றுக்கு காத்திருக்கும்போது இப்படி நகம் கடிப்பது உண்டு .இதனால் நகம் வெளிறி காணப்படும் .இதனால் ஏற்படும் தீங்கை பற்றி பார்க்கலாம்
1. இது பல்வேறு ஆபத்துக்களை கொண்டுள்ளது. மிக முக்கியமாக பல்வேறு நோய்த் தொற்றுகளுக்கு நீங்கள் உள்ளாவீர்கள்.
.2.நீங்கள் அடிக்கடி உங்கள் கைகளை சுத்தமாக கழுவி வைத்து இருந்தாலும் உங்களுடைய நகங்களுக்கு அடியில் உள்ள எல்லா கிருமிகளும் அழுக்குகளும் வெளியேறுவது கடினம்.


3.. தொடர்ந்து நகத்தை கடித்து கொண்டிருப்பதால் உங்கள் நகங்களை சுற்றி இருக்கக்கூடிய தோலை காயப்படுத்திக் கொண்டிருக்கும். இது நகங்களை வளர செய்யும் திசுக்களை சேதப்படுத்த ஆரம்பிக்கும்.

4.மேலும் நகத்தை சுற்றி வலி, வீக்கம், நகம் சிவந்துபோதல் இப்படிப்பட்ட பிரச்சினைகளும் பாக்டீரியா தொற்றுக்களையும் ஏற்படுத்தும். .
5.தொடர்ந்து நகம் கடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு பாக்டீரியாக்கள் வாயில் நுழைவதால் வாய்துர்நாற்றம் ஏற்படும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

6.சிலருக்கு நகம் கடிப்பது மிக தீவிரமான உளவியல் சம்பந்தப்பட்ட உணர்ச்சி பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம். நீங்கள் பலமுறை நகம் கடிப்பதில் இருந்து வெளியே வர முயற்சித்தும் உங்களால் முடியாமல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.