'மதுரை மண்ணின் மைந்தன்'…. வைகைப்புயல் வடிவேலுவை சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்… வைரலாகும் பதிவு…!!
SeithiSolai Tamil February 07, 2025 02:48 PM

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக விளங்குபவர் வடிவேலு. இவர் சமீப காலத்தில் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து, தற்போது காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்பு திறமையால் வைகை புயல் என்று அழைக்கப்பட்டார். இந்நிலையில் நடிகர் வடிவேலுவை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது, தன்னிகரற்ற நகைச்சுவை திரைக்கவிஞர் இன்றளவும் மீம் உலகின் முடி சூடா மன்னனாக விளங்கும் எங்கள் மதுரை மண்ணின் மைந்தன் வைகைப்புயல் வடிவேலு அவர்களை விமான நிலையத்தில் சந்தித்து உரையாடியதில் நானும் அவரது ரசிகன் என்ற முறையில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.