இன்று அதிகாலை முதலே சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தேமுதிக தலைமையகத்தில், விஜயகாந்த் நினைவிடத்தில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
இன்று தேமுதிக 25வது ஆண்டு கொடி நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தேமுதிக தலைமை கழகம் அறிவித்திருந்தது.
இது குறித்து தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் பிப்ரவரி 7ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற உள்ளது.
பிப்ரவரி 12ம் தேதி 25 வது ஆண்டு கொடி நாள் விழாவை முன்னிட்டு முக்கிய ஆலோசனை மற்றும் கழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளது. எனவே அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த கூட்டத்தில் பங்கு பெறுவதற்காக தமிழகம் முழுவதும் இருந்தும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சென்னை வந்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்று அதிகாலை முதலே கட்சி நிர்வாகிகளும், அவர்களுடன் வந்திருந்தவர்களும் விஜயகாந்த் நினைவிடத்தில் குவிந்து வருகின்றனர்.