மறக்க முடியாத பாடல்: செண்பகமே செண்பகமே இந்த பாடலை யாராலும் மறக்க முடியாது. கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் சாந்தி பிரியா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் எங்க ஊரு பாட்டுக்காரன். இந்த படத்தின் மூலம்தான் சாந்தி பிரியா ஹீரோயினாக முதன் முதலில் அறிமுகமானார். இவர் நடிகை பானுப்பிரியாவின் சகோதரி. ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த சாந்தி பிரியா அதன் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார்.
புரிதல் இருந்தது: இப்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு வெற்றிமாறன் படத்தில் ரீ என்ட்ரி கொடுப்பதாக ஒரு தகவல் வெளியானது .இந்த நிலையில் சாந்தி பிரியா நடிகர் ராமராஜனை பற்றி அவருடைய அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார். எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் நானும் புதுசு .ராமராஜனும் புதுசு. அதனால் இருவரும் எங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டோம். எங்களுக்கான புரிதல் அதிகமாக இந்த படத்தில் இருந்தது.
இப்படி ஒரு குணம்: நான் எப்படி நடிக்க வேண்டும் என கங்கை அமரன் எனக்கு நடித்து கொடுத்து காண்பித்தார் .அது மட்டுமல்ல நான் என் அக்காவுடன் பல படங்களில் டிராவல் செய்து இருக்கிறேன் .அதனால் ஓரளவு சினிமாவைப் பற்றிய அறிவு என்னிடமிருந்தது. ராமராஜனும் உதவி இயக்குனராக இருந்து அதன் பிறகு படங்களில் நடிக்க வந்தவர். அவரை பொறுத்த வரைக்கும் எந்த நடிகையாக இருந்தாலும் அம்மா என்று தான் அழைப்பார் .சொல்லுமா வாமா உட்காருமா என்று தான் மா போட்டு தான் அனைவரையும் அழைப்பார்.
.எம்ஜிஆர் மாதிரி: அது ஒரு நல்ல பழக்கம் .அந்த ஒரு நேச்சர் அவரிடம் அதிகமாக இருந்தது என ராமராஜனை பற்றி சாந்திப்பிரியா இந்த பேட்டியில் கூறியிருக்கிறார். பொதுவாகவே ராமராஜன் என்றாலே எம்ஜிஆர் மாதிரி. தன்னுடைய படங்களில் புகைபிடிக்க கூடாது .குடிப்பது மாதிரியான சீன்களில் நடிக்க கூடாது என்பதில் கவனமாக இருப்பவர். எம்ஜிஆர் மீது உள்ள அன்பின் காரணமாகத்தான் அவருடைய சட்டையும் படங்களில் கலர் கலராக போட்டு நடித்திருப்பார்.
கேரக்டர் ரோலுக்கு நோ: மக்களின் நாயகனாக இன்றுவரை திகழ்ந்து வருகிறார் என்றால் அவருடைய அடிப்படையான குணம் என்பதுதான் காரணம். அனைவரிடமும் பழகும் விதம் அரவணைத்துக் கொண்டு செல்லும் முறை என யாரையும் புண்படுத்தாதவாறு இன்றுவரை சினிமாவில் ஒரு தலை சிறந்த மனிதராக இருந்து வருகிறார் ராமராஜன். கிட்டத்தட்ட 49 படங்களில் நடித்து விட்டார் ராமராஜன் . நடித்த படங்கள் அனைத்துமே ஹீரோவாகவே நடித்ததனால் இவரை கேரக்டர் ரோலுக்கு அழைத்தாலும் அதற்கு அவர் நடிக்க முன் வருவதில்லை .
எத்தனையோ படங்களில் கேரக்டர் ரோலுக்கு இவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால் எல்லா படங்களையும் மறுத்துவிட்டார் ராமராஜன் .நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இப்போது வரை இருவருக்குள்ளுமே ஒருவருக்கொருவர் பாசத்துடனும் அன்புடனும் தான் மனதளவில் வாழ்ந்து வருகிறார்கள். தன்னுடைய பிள்ளைகளுக்கு ஏதாவது ஒரு நல்லது நடக்கும் நேரத்தில் இருவருமே மேடையில் ஒன்றாக நின்று பிள்ளைகளுக்காக அந்த நிகழ்ச்சியை நடத்தி கொடுத்து விட்டு வருகின்றனர்.