யுஜிசி வரைவு விதிகள்: காங்கிரஸ் தலைவர்களுக்கு தேச வரலாறு, மொழிகள் பற்றி எதுவும் தெரியாது; மத்திய கல்வி அமைச்சர்..!
Seithipunal Tamil February 07, 2025 08:48 AM

யுஜிசி வரைவு விதிகள் தொடர்பாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டம் குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்து தெரிவித்துள்ளார்.

கல்விமுறை மேம்பாட்டுக்கான முயற்சியை ராகுல் காந்தி உள்ளிட்டோர் அரசியல் காரணத்துக்காக எதிர்க்கின்றனர் என தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

அத்துடன், யுஜிசி விவகாரம் குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:-

யுஜிசி என்பது தன்னாட்சி அமைப்பு. சுதந்திரத்திற்கு முன்பிலிருந்தே பல்கலைக்கழக வேந்தர்களாக ஆளுநர்களே இருந்து வந்துள்ளனர் என பல முறை கூறியிருக்கிறேன்.

எதிர்க்கட்சிகள் அரசியல் உள்நோக்கத்தோடு, சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கின்றனர். ராகுல் காந்தி ஒருபோதும் இந்தியாவை புரிந்து கொண்டதில்லை. காங்கிரஸ் தலைவர்களுக்கு தேச வரலாறு, மொழிகள் பற்றி எதுவும் தெரியாது.

நாட்டின் அனைத்து மொழிகளும் இந்தியாவின் தேசிய மொழிகள் என பிரதமர் பலமுறை கூறியிருக்கிறார் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.