அதிமுகவிலிருந்து வட்டக் கழகச் செயலாளர் உதயகுமார் நீக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்;
கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த M. உதயகுமார், (15 கிழக்கு வட்டக் கழகச் செயலாளர்)
இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது" என எடப்பாடி K. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் கடந்த 30ஆம் தேதி அமைதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடந்ததாகவும், இதில் ஏற்கனவே உள்ள வழிபாட்டு முறைகளை பின்பற்ற அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் உறுதி அளித்ததாகவும், அதிமுக தரப்பில் கலந்து கொண்ட பிரதிநிதி மட்டும் கையெழுத்திடாமல் மறுத்துவிட்டு சென்றதாக புகார் எழுந்திருந்தது.
ஒருவேளை புறக்கணித்து சென்ற அந்த அதிமுக நிர்வாகி தான் உதயகுமாராக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.