#BREAKING : மரண தண்டனைக்கு எதிரான முறையீடு ஏற்பு..!சிறை தண்டனையும் நிறுத்தி வைப்பு..!
Newstm Tamil February 07, 2025 02:48 AM

கேரளா - தமிழ்நாடு எல்லைப் பகுதியில் உள்ள பாறசாலையைச் சேர்ந்த ஷாரோன் ராஜுக்கு, கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில், அவரது காதலி கிரீஷ்மாவுக்கு, தூக்கு தண்டனை விதித்து, நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஷரோன் ராஜ் "இன்ச் பை இன்ச்" ஆக கொல்லப்பட்டதாக நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

நெய்யாற்றின்கரை நீதிமன்றம், இந்த வழக்கில் நேரடி சாட்சிகள் யாருமே இல்லாத நிலையிலும், போலீசார் முதன்மையாக சமர்ப்பித்த மருத்துவ மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை பரிசீலித்து, கிரீஷ்மா மற்றும் அவரது தாய் மாமா நிர்மலகுமாரன் ஆகியோர் குற்றவாளிகள் என உறுதி செய்து, கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.

கூகுள் டிரைவில் பேக்கப் டேட்டாவை திறப்பது எப்படி, கூகுள் டிரைவில் பேக்-அப் செய்யப்பட்ட வாட்ஸ்அப் மெசேஜ்களை எப்படி பார்ப்பது, கூகுள் டிரைவில் வாட்ஸ் அப் மெசேஜ்களை பார்ப்பது எப்படி, வாட்ஸ்அப்பில் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை திரும்பப் பெறுவது எப்படி என்று கூகுளில் கிரீஷ்மா தேடியதையும் நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொண்டது.

கிரீஷ்மா, கூகுளில் தேடிய இந்த விஷயங்களை எல்லாம், குற்றத்திற்கான ஆதாரங்களை மறைக்க முயற்சி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஷாரோன் ராஜுக்கு விஷம் கலந்து கொடுக்க ஆன்லைனில் தேடியது போலவே, அவரது மரணத்துக்குப் பிறகு தான் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க கிரீஷ்மா பல தந்திரங்களைச் செய்ததாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

ஷாரோன் கொலை வழக்கில் கிரீஷ்மாவும் விஷம் வாங்கிக் கொடுத்த தாய்மாமா நிர்மல் குமாரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. இரண்டாம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த கிரீஷ்மாவின் தாய் சிந்துவை வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுவித்தது. 

கிரீஷ்மாவுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கொலைக்கு உடந்தையாக இருந்த கிரீஷ்மாவின் மாமா நிர்மல்குமாரன் நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஷாரோன் ராஜ் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, குற்றவாளி க்ரீஷ்மா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கேரள உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது

ஆதாரங்களை மறைத்ததாக க்ரீஷ்மாவின் மாமாவுக்கு (விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையும் நிறுத்தி வைப்பு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.