தமிழக முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலியில் களப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது.
அப்போது பாஜகவில் இருந்து சமீபத்தில் விலகிய நெல்லை மாவட்டம் முன்னாள் பாஜக தலைவர் தயா சங்கர், முன்னாள் பொதுச் செயலாளர் வேல்முருகன் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். மேலும் பாஜகவில் இருந்து கூண்டோடு விலகி திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர்.