Breaking: “5 வருடங்களுக்குப் பிறகு”… ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு… ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!
SeithiSolai Tamil February 07, 2025 04:48 PM

இந்திய ரிசர்வ் வங்கி தற்போது வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 11 முறையில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் கிட்டதட்ட 5 வருடங்களுக்கு பிறகு வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளதால் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைகிறது. ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.