தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று கடலூரில் களப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் இணைந்தனர். அதன்படி கிட்டத்தட்ட 5774 பேர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைத்தனர்.
அதாவது அதிமுக, தேமுதிக, பாமக, தவெக, நாதக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 5774 நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
மேலும் இதில் பாமக கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் செம்மேடு அருள் ஜோதி, தேமுதிக கட்சியின் ஒன்றிய பொருளாளர் அன்பழகன் மற்றும் பாஜக ஓ பி சி அணியின் மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோரும் அடங்குவார்கள்.