தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. ரேஷன் கடைகளில் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுவதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பயன் பெறுகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் இன்று அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என்று தற்போது அரசு அறிவித்துள்ளது.
அதாவது பொங்கல் பண்டிகையின் போது ஜனவரி 10-ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டு வேலை நாளாக அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக பிப்ரவரி 22ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை ஆகும்.