அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், 7 திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், 7 திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2022ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள வில்லா டைப் வீடுகளை குறிவைத்து காரில் வந்து கொள்ளையடித்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். முதற்கட்டமாக பள்ளிக்கரணை பகுதியில் 7 வீடுகளில் கைவரிசை காட்டியதை ஞானசேகரன் ஒப்புக் கொண்டுள்ளார் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையடித்த நகைகளை விற்ற பணத்தில்தான் சொகுசு கார் வாங்கியதாகவும், பிரியாணி கடை வைத்ததாகவும், பெண்களுடன் ஜாலியாக செலவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். திருட்டு வழக்கு தொடர்பாக போலீசர் ஞானசேகரனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஞானசேகரனை 3 நாட்கள் காவலில் எடுத்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.