நாதக-வில் இருந்து விலகுகிறார் காளியம்மாள்? சீமான் அளித்த ஷாக் பதில்.!
Tamilspark Tamil February 23, 2025 12:48 AM
நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து வருபவர் காளியம்மாள்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணப்பாடு பகுதியில், அடுத்த மாதம் உறவுங்கள் சங்கமம் என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அந்த நிகழ்ச்சியில் காளியம்மாளும் பங்கேற்கவுள்ள நிலையில், காளியம்மாள் பெயர் அச்சிதழில் இடம்பெற்றுள்ளது.

இதையும் படிங்க:

அவரின் பெயரில் கட்சியின் பொறுப்பு ஏதும் இல்லாமல், சமூக செயற்பாட்டாளர் என அடையாளத்துடன் அவர் பங்கேற்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 மாதமாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணி உட்பட எந்த விஷயத்திலும் அவர் தலையிடவில்லை.

காளியம்மாள் கட்சி விலகலாம்?

இதனால் அவர் கட்சியில் இருந்து விலகுகிறாரா? அல்லது வேறு கட்சிக்கு செல்லவுள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே நாதக நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகி வரும் நிலையில், தற்போது காளியம்மாள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காளியம்மாள் அளிக்கும் பேட்டியில் கட்சியின் நிலை குறித்து அவர் அறிவிக்கலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், நாம் தமிழர் கட்சியின் சீமான், கட்சியில் இருந்து யார் வேண்டுமானாலும் விலகலாம், இணையலாம். காளியம்மாள் நாதக-வின் களையாக இருக்கலாம். இலையுதிர் காலம் போல, இது நாதகவில் களையுதிர்காலம் என கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.