சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் திருக்கோவில் திருப்பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது;- "இறைவன் முன்பு அனைவரும் சமம் என்ற வார்த்தைக்கு இன்று உயிர் கிடைத்துள்ளது. எனவே, நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ''பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வது புதிய நடைமுறை அல்ல. இந்த போராட்டம் சுமார் 02 ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இறைவன் முன்பு அனை இருக்கும்." இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.