சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் இந்திய அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தியிருந்தது . இதனையடுத்து இன்று இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் துபாயில் நடக்கிறது. இன்று போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும் என்பதால் பாகிஸ்தான் வெற்றிக்காக கடுமையாக போராடும். பாகிஸ்தான் கிட்டதட்ட அரையிறுதி வாய்ப்பு உறுதியாக இருந்தால் இந்திய அணியும் அதே போல கடுமையாக போராடும்.
இதனால் ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டி தொடரின் ஐந்தாவது லீக் ஆட்டம் துபாயிலுள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு நடக்கிறது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் பேசுகையில், ” நான் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் சதம் அடிக்க விரும்புகிறேன். தொடக்கம் நன்றாக அமைந்து விட்டால் நீண்ட நேரம் களத்தில் தாக்கு பிடித்து விடுவேன். ஒரு முறை களம் செட் ஆகிவிட்டால் எந்த பேட்டரும் நீண்ட இன்னிங்ஸை விளையாடவே முயல்வார்கள்” என்று கூறியுள்ளார்.