ரசிகர்கள் ஷாக்..! கார் ரேஸின் போது விபத்தில் சிக்கிய அஜித்குமார்..!
Top Tamil News February 23, 2025 11:48 AM

நடிகர் அஜித் கார் ரேஸில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் ஆரம்பத்தில் இருந்தே அவர் கார் மற்றும் பைக் ரேஸில் பங்கேற்று வந்திருக்கிறார். கடந்த மாதம் நடைபெற்ற மிச்சலின் 24 ஹெச் துபாய் கார் ரேஸில் கலந்து கொண்ட அஜித் குமார் ரேசிங் குழு சார்பில் பங்கேற்றார்.இதில் மிக சிறப்பாக செயல்பட்ட அஜித்குமார் ரேஸிங் 3வது இடத்தை பிடித்தது.

தொடர்ந்து சினிமாவிலும் கார் ரேசிலும் நடிகர் அஜித்குமார் பயணிப்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் துபாயில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது அடுத்த பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளது அஜித்குமார் ரேசிங் க்ளப் அணி.

ஸ்பெயின் நாட்டின் பேலன்சிய மாகாணத்தில் நடைபெற்ற கார் ரேசில் நடிகர் அஜித்குமாரின் அணி கலந்து கொண்டது. இந்த போட்டியின் தகுதி சுற்றில் அஜித்குமார் கலந்து கொண்டார். கிளப் டிவிஷன் முதல் ரேஸில் 14வது இடத்தை அவர் பிடித்து அசத்தியிருக்கிறார். இதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் சென்ற கார் விபத்தில் சிக்கியதை பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி இருக்கிறது.

பந்தயத்தில் போட்டியாளர் ஒருவரின் கார் வளைவில் திரும்பிய போது நிலைத்தடுமாறியது. இதனால் அக்காரின் பின் வந்த அஜித்தின் கார் விபத்துக்குள்ளாகி ரேஸ் டிராக்கை விட்டை விலகி 2 முறை உருண்டோடியது. விபத்தில் அஜித்திற்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்குமாரின் கார் மோதி இரண்டு மூன்று சுற்று உருண்டு சென்று நின்றது. தொடர்ந்து ஆம்புலன்ஸ் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு அஜித்குமாரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது. அஜித் காயம் இன்றி உயிர்த்தப்பினாலும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இந்நிலையில் அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திராவின் பதிவில் ஏ.கே நலமாக இருப்பதாகவும், அவருக்காக அவர் மீது அக்கறையுடன் பிரார்த்தித்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


 


 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.