சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கிய நிலையில் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து மோதிய நிலையில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதிய நிலையில் இந்தியா வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது திடீரென இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அதாவது நேற்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதிய மேட்ச் நடந்து கொண்டிருக்கும் போது இந்திய தேசிய கீதம் சில வினாடிகள் ஒலிக்கப்பட்டது பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில் இதற்கு கண்டிப்பாக ஐசிசி பதில் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தேசிய கீதம் ஒலிக்கப்படுவதற்கு ஐசிசி தான் பொறுப்பேற்றுள்ளது. இதன் காரணமாக கண்டிப்பாக இதற்கு ஐசிசி பதில் வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதி அனுப்பியதோடு இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியா கலந்து கொள்ளும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.