ஐபிஎல் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் போட்டியில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான போட்டி இன்று துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில் ஐஐடி பாபா இந்த விஷயத்தில் வேறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது மகா கும்பம்மேளாவில் பிரபலமாக இருக்கும் ஐஐடி பாபா, இந்த போட்டியை குறித்த கணிப்பை தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அதில் அவர் இந்த முறை நான் முன்கூட்டியே சொல்கிறேன். இந்தியா ஜெயிக்காது, விராட் கோலி தன்னால் முடிந்ததை செய்யலாம், வேறு யாராவது முயற்சி செய்யலாம், எல்லாரையும் முழு பலத்துடன் முயற்சி செய்யச் சொல்லுங்கள். என்னதான் முயற்சி செய்தாலும் இந்திய அணி வெற்றி பெறாது, விராட் கோலியாலும் கூட இந்தியாவை காப்பாற்ற முடியாது. இந்த முறை இந்தியா வெற்றி பெறாது, பாகிஸ்தான் தான் வெற்றி பெறும் என்று நான் உங்களுக்கு முன்பே சொல்கிறேன். எவ்வளவு முயற்சி செய்தாலும் தவிர்க்க முடியாத முடிவை யாராலும் மாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.