திருப்பூர் மாவட்டம் மங்கலம் சாலை கே.டி.கே தோட்டம் பகுதியில் அருண்குமார்- மாலா(36) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சுஜித் குமார்(11) என்ற மகன் இருந்துள்ளார். சுஜித் அதே பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். மாலா பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்தார். நேற்று மாலா விஷம் கலந்த உணவை தனது மகனுக்கு கொடுத்துவிட்டு அவரும் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மாலாவையும் சுஜித் குமாரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாலா பரிதாபமாக உயிரிழந்தார். சுஜித் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.