#featured_image %name%
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் அடித்து கை கொடுக்க, இந்தியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சுருக்கமான ஸ்கோர் :
பாகிஸ்தான் – 241 / 10 (49.4 ஓவர்)
இந்தியா – 244 / 4 (42.3 ஓவர்)
பாகிஸ்தான் அணியை (49.4 ஓவர்களில் 241 ரன், சவுத ஷகீல் 62, முகம்மது ரிஸ்வான் 46, குஷ்தில் ஷா 38, பாபர் ஆசம் 23, குல்தீப் யாதவ் 3/40, ஹார்திக் பாண்ட்யா 2/31,ராணா 1/30, அக்சர் படேல் 1/49, ரவீந்தர் ஜதேஜா 1/40) இந்திய அணி (42.3 ஓவர்களில் 244/4, விராட் கோலி ஆட்டமிழக்காமல் 100, ஷ்ரேயாஸ் ஐயர் 56, ஷுப்மன் கில் 46, ரோஹித் ஷர்மா 20, ஷஹீன் ஷா அஃப்ரிடி 2/74, அப்ரார் அகமது 1/28, குஷ்தில் ஷா 1/43) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற பாகிஸ்தான் அணியின் அணித்தலைவர் முகமது ரிஸ்வான் முதலில் மட்டையாடத் தீர்மானித்தார். பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் மிகச் சுமாரான தொடக்கம் தந்தனர். இமாம்-உல்-ஹக் (10 ரன்), பாபர் ஆசம் (23 ரன்) பத்து ஓவர்கள் முடிவதற்கு முன்னர் ஆட்டமிழந்தனர். பவர்ப்ளே முடிவில் அந்த அணி 2 விக்கட் இழப்பிற்கு 52 ரன் எடுத்திருந்தது. அதன் பின்னர் சவுத் ஷகீல் (76 பந்துகளில் 62 ரன், 5 ஃபோர்) மற்றும் ரிஸ்வான் (7 பந்துகளில் 46 ரன், 3 ஃபோர்) மூன்றாவது விக்கட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். அதன் பின்னர் குல்தீப் ஷா (39 பந்துகளில் 38 ரன்) மட்டுமே சிறப்பாக ஆடினார். பாகிஸ்தான் அனி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 241 ரன் எடுத்தது.
242 என்ற இலக்கு கடினமானதல்ல. அதனை அடைய இந்திய அணி தொடக்கத்தில் மிகச் சிறப்பாக ஆடியது. ரோஹித் ஷர்மா (15 பந்துகளில் 20 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) கில் (52 பந்துகளில் 46 ரன், 7 ஃபோர்) இருவரும் சிறப்பாக ஆடினர். விராட் கோலி (111 பந்துகளில் 100 ரன், 7 ஃபோர்) ஷ்ரேயாஸ் ஐயர் (67 பந்துகளில் 56 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்), ஆகியோரும் சிறப்பாக ஆடினர். இறுதியில் 42.3 ஓவர்களில் 244 ரன் எடுத்து இந்திய அணி ஆறு விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் உள்ளன. இவற்றுள் இந்தியா அணி இரண்டு ஆட்டங்களில் ஆடி இரண்டிலும் வெற்றி பெற்று, நாலு புள்ளிகளுடன் குரூப்பில் முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி ஒரு ஆட்டத்தில் வென்று 2 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. வங்கதேச அணி இரு ஆட்டத்தில் விளையாடி தோல்வியுற்று, மூன்றாமிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி நியூசிலாந்து, இந்தியா ஆகிய அணிகளிடம் விளையாடி இரண்டு ஆட்டத்திலும் தோல்வியுற்று கடைசி இடத்தில் உள்ளது.
ஏற்கெனவே, வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடர்ந்து 2 வெற்றிகளைப் பதிவு செய்து, அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதேநேரம், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ளது.
குரூப் பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன. தென் ஆப்பிரிக்க, மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தலா ஒரு ஆட்டத்தில் வென்று, புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் முறையே உள்ளன. அதற்கடுத்த இரண்டு இடங்களில் இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் உள்ளன்.
இன்றைய ஆட்டத்தில் ஆட்டநாயகனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டார்.
14,000 ரன் கடந்த விராட் கோலிஇந்தப் போட்டியில் விராட் கோலி 14 ரன் எடுத்திருந்த போது, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் குறைந்த இன்னிங்சில் 14,000 ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர் சச்சினின் (350 இன்னிங்ஸ்) சாதனையை 287 இன்னிங்சில் முறியடித்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுக்களை எடுத்த ஹர்திக் பாண்டியா சர்வதேச கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்; மற்றொரு இந்திய பவுலர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுக்களை எடுத்ததன் மூலம் 300 விக்கெட்டுக்கள் என்ற மைல்கல்லை எட்டினார்
News First Appeared in