மண்ணெண்ணெய் குண்டுகள் வீசிய மர்ம நபர்கள்: போலீசார் விசாரணை!!!!
Seithipunal Tamil February 24, 2025 06:48 AM

விருதாச்சலம் பகுதியில் வசிக்கும் பழனிமுத்து, என்பவரின் வீட்டின் மேல் மண்ணெண்ணெய் குண்டுகள் வீச்சு காரணமாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதாச்சலம் அண்ணா நகர்ப் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரனின் மகன்கள் செல்வகுமார் மற்றும் சேகர். இவர்களுக்கு இடையே நீண்ட நாட்களாகக் குடும்ப பிரச்சினை நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சகோதரர்கள் இருவரும் மீண்டும் குடும்ப பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் பழனிமுத்து என்பவர் சண்டையை விலக்க முற்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சகோதரர்கள் பழனி முத்துவிடம் எங்கள் குடும்ப சண்டையில் தலையிட நீ யார் ? என்று கேட்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் இருவரும் கலைந்து சென்றனர்.

இந்நிலையில், இன்று அதிகாலையில் 1 மணி அளவில் முத்து வீட்டின் முற்பகுதியில் மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் நிரப்பிய இரண்டு பாட்டில்களில் தீ வைத்து பழனிமுத்து வீட்டின் முன்பு வீசி உள்ளனர். இதில் வீட்டின் முன்புறம் தீப்பிடித்துக் கொழுந்து விட்டு எறிந்துள்ளது.

வெடி சத்தம் கேட்டு உறங்கிக் கொண்டிருந்த பழனிமுத்து மற்றும் அவரது தாய் தெய்வ நாயகி ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

பின்பு, இச்சம்பவம் குறித்து விருதாச்சலம் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டனர். இத்தகவலின் படி, இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்த் தலைமையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மண்ணெண்ணெய் குண்டு வீசிய இடத்தைப் பார்வையிட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.