சர்வதேச போட்டிகளில் சாதனை படைத்த ரோஹித் சர்மா - விராட் கோலி..!
Seithipunal Tamil February 24, 2025 09:48 AM

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக இப்போட்டியில் விராட் கோலி 02 கேட்சுகளை பிடித்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்ச்கள் பிடித்த இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். விராட் கோலிக்கு அடுத்தபடியாக அசாருதின் 156 கேட்சுகளும் சச்சின் 140 கேட்சுகளும் ட்ராவிட் 124 கேட்சுகளும் ரெய்னா 102 கேட்சுகளும் பிடித்துள்ளனர்.

அத்துடன், சர்வதேச அளவில் அதிக கேட்ச் பிடித்தவர்களின் பட்டியலில் ஜெயவர்த்தன (218), ரிக்கி பாண்டிங் (160) ஆகியோருக்கு அடுத்து 03 ஆவது இடத்தில விராட் கோலி உள்ளனர். இந்நிலையில், இன்று டுபாயில் நடந்த இந்த லீக் ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, 20 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தானின் ஷாகீன் அப்ரிதி, ஒருநாள் போட்டியில் 05-வது முறையாக ரோகித்தை அவுட்டாக்கினார்.

இவர், ஒருநாள் போட்டி அரங்கில் அதிவேகமாக 9,000 ரன்னை எட்டிய தொடக்க வீரராகியுள்ளார்.  181 இன்னிங்சில், இந்த இலக்கை அடைந்துள்ளார். இதற்கு முன் இந்திய ஜாம்பவான் சச்சின், 197 இன்னிங்சில் இம்மைல்கல்லை எட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தவிர 9,000 ரன்னை எட்டிய 06-வது தொடக்க வீரரானார் ரோகித். இதுவரை 183 போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் 9,019 ரன் எடுத்துள்ளார். 

முதல் ஐந்து இடங்களில் உள்ளவர்கள்;

1- சச்சின் (15,310 ரன், 344 போட்டி) 
2- இலங்கையின் ஜெயசூர்யா (12,740 ரன், 383 போட்டி)
3- வெஸ்ட் இண்டீசின் கெய்ல் (10,179 ரன், 280 போட்டி) 
4- ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் (9200 ரன், 260 போட்டி) 
5- இந்தியாவின் கங்குலி (9146 ரன், 242 போட்டி) 
6- இந்திவாவின் ரோகித் சர்மா (9,019 ரன்,183 போட்டி)


 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.