பொதுவாக கிட்னியில் கல்லுக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டாலும் உணவு கட்டுப்பாடு இல்லாவிட்டால் அந்த கல் மீண்டும் மீண்டும் வரும் .அதனால் சில உணவுக்கட்டுப்பாடு அவசியம் இந்த கல் உருவாகும் உடலமைப்பை கொண்டவர்கள் பின் பற்ற வேண்டும் .இதை எவ்வாறு தடுக்கலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம்
1. இந்த கற்கள் கூழாங்கல் அளவில் இருக்கும்போதே ஆயுர்வேத சிகிச்சை எடுத்து கொண்டும் ,சில உணவு கட்டுப்பாடும் எடுத்து கொண்டால் அந்த கல் பெரிதாகாமல் காப்பாற்றலாம்
2.சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் சாப்பிடகூடாதவை
கால்சியம் மற்றும் வைட்டமின் டி இருக்கும் உணவுகளை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.
3.சிறுநீரக கற்களைத் தவிர்க்க தக்காளி, ஆப்பிள், கீரை போன்ற அதிக ஆக்சலேட் பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தவிர்க்கவும்.
4.புரதம் அதிகம் உள்ள உணவுகளான, இறைச்சி மற்றும் மீன் போன்றவற்றை மிதமான அளவு எடுத்துக் கொள்வது நல்ல பலனை தரும்.
5.கொழுப்பு அதிகம் சேர்க்கப்பட்ட, பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகளான சீஸ், தயிர், வெண்ணெய் போன்றவற்றை குறைவாக சாப்பிட வேண்டும்.
6.பூண்டு, வெங்காயம், முள்ளங்கி, கேரட் ஆகியவற்றில் சோடியம் மற்றும் ஆக்சலேட் அதிக அளவில் உள்ளது. எனவே, இவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.