திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலகிருஷ்ணம்பட்டி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி (33) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மனைவி மற்றும் ஆண் குழந்தை இருக்கிறார்கள். இவர் டீக்கடை வைத்து நடத்தி வரும் நிலையில் 7-ம் வகுப்பு படிக்கும் ஒரு 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் முசிறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கிருஷ்ணமூர்த்தியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.