“அரை சதம் அடிப்பதற்கு முன்பே அவுட்டான சுப்மன் கில்”.. அப்படி ஒரு ரியாக்சன் கொடுத்த பாக். வீரர்… செம வைரல்..!!
SeithiSolai Tamil February 24, 2025 01:48 AM

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கிய நிலையில் மொத்தம் 8 அணிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளது. இதன் முதல் போட்டி பாகிஸ்தானில் நடைபெற்ற நிலையில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதன்பிறகு இரண்டாம் நாள் போட்டியில் வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதிய நிலையில் இந்தியா வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதிய நிலையில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிகள் துபாயில் நடைபெறுகிறது.

உலகமே எதிர்பார்க்கும் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி என்றால் பரபரப்புக்கும் சுவாரஸ்யத்திற்கும் பஞ்சமே இருக்காது. இந்த நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி அபாரமாக பந்து வீசியது. இறுதியில் 49.4 ஓவர்களில் பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து தற்போது இந்தியா பேட்டிங் செய்கிறது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வரை வீழ்த்தினார். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷகீல் 62 ரன்கள் எடுத்தார்.இந்திய அணிக்கு தற்போது 242 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த ரோகித் சர்மா வெறும் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின் போது சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆரம்பத்திலேயே சொதப்பியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் 51 ரன்களை கடந்து அதிரடியாக விளையாடி வருகிறார். அதோடு 15 ரன்கள் கடந்த போது ஒருநாள் தொடர்களில் 14,000 ரன்களைக் கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இந்நிலையில் சுப்மன் கில் நிதானமாக விளையாடி 46 ரன்கள் வரை எடுத்த நிலையில் அரை சதம் அடிப்பதற்கு முன்பாகவே அவுட் ஆகிவிட்டார். மேலும் சுப்மன் கில் அவுட் ஆகும்போது பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமது ஒரு ரியாக்ஷன் கொடுத்தார். அவர் எதற்காக அப்படி ஒரு ரியாக்சன் கொடுத்தார் என்பது தெரியவில்லை. மேலும் அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.