நடிகை மல்லிகா தனது அனுபவங்களைப் பற்றி யூடியூப் சேனல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். சினிமா வாய்ப்பு இல்லாத காலகட்டத்தில் பல வேலைகளும் செய்கிறார். அரசியல் கூட்டத்துக்குப் போனா 100 ரூபா கிடைக்கும். ஏன்னா சினிமாவை மட்டும் நம்பி இருக்கக்கூடாது. பல பேரு அழிஞ்சி போயிருக்காங்க என்கிறார் நடிகை மல்லிகா. இவர் ரஜினி குறித்து என்ன சொல்றாருன்னு பாருங்க.
நான் ரஜினி சாரு கூட நிறைய படங்கள்ல நடிச்சிருக்கேன். முத்து, பாட்ஷா எல்லாம் ஜூனியர் ஆர்டிஸ்ட்டா நடிச்சிருக்கேன். அப்படி போயிருக்கும்போது அவரைப் பற்றி சில பேரு சொல்லி நான் கேள்விப்பட்டு இருக்கேன். எப்படின்னா அவரு ஆரம்பத்துல கம்பெனி ஆர்டிஸ்ட்டா வரும்போது யாரு கூடயும் பேச மாட்டாராம்.
இன்னொரு பீஸ் போடுங்க: பிரேக் விட்ட உடனே சாப்பிடப் போவாராம். போகும்போது என்னன்னா ஒரே ஒரு சிக்கன் பீஸ் போட்டு குழம்பு ஊத்திருக்காங்க. இவருக்குக் கறிக்கொழம்புன்னா ரொம்ப பிடிக்குமாம். அவரு கேட்குறதுக்கு சங்கடப்பட்டுக்கிட்டு அண்ணன் இன்னொரு பீஸ் போடுங்கண்ணேன்னு மெதுவா கேட்டுருக்காரு.
'யோவ் போய்யா... எல்லாருக்கும் போடணும்ல'ன்னு அவரு சொன்ன உடனே ஏன்டா கேட்டோம்னு ஆகிடுச்சு. அவரு பாட்டுக்கு சாப்பிட்டுட்டுப் போயிட்டாரு. எல்லாரும் சாப்பிட்டுட்டு போயிட்டாங்க. பக்கத்துல ஒருத்தர் 'அண்ணன் ஒரு பீடி கிடைக்குமா'ன்னு கேட்டுருக்காரு. அவரு ஏதோ திட்டிருவாரோன்னு பயந்து கேட்டுருக்காரு.
இவரு ஒண்ணும் சொல்லல. இந்தாங்க பீடின்னு கொடுத்துருக்காரு. அது முடிஞ்சு பல வருடங்கள் ஆகிடுச்சு. அப்புறம் ஸ்டார் ஆகிட்டாரு. ஒரு லொகேஷன்ல சூட்டிங் நடக்கு. அப்போ சார் உங்களுக்கு நான்வெஜ்ல என்னென்ன சாப்பாடு வேணும்னு கேட்டுருக்காங்க. நான்வெஜ்ல என்னென்ன இருக்கோ அத்தனையும் கொண்டு வாங்கன்னு சொல்லிருக்காரு.
அந்த அடையாளம்: சாப்பாடு எல்லாம் ரெடி. உடனே ரஜினி சொன்னாராம். 'அந்த ஆளு இருக்காருல்ல. அவருக்கிட்ட கொடுத்து எங்கிட்ட கொண்டு வரச் சொல்லுங்க'ன்னு சொல்லிருக்காரு ரஜினி. ஏன்னா அவருதான் குழம்பு ஊத்துனாரு. அந்த அடையாளம் தெரிஞ்சி வச்சிருக்காரு இவரு.
நீங்கதான் சாப்பிடணும்: அப்போ இலையை போட்டுட்டாரு. என்னென்ன இருக்கோ எல்லாத்தையும் எடுத்து வைங்கன்னு சொல்லிருக்காரு ரஜினி. அவரும் எடுத்து வச்சிட்டாரு. 'சார் உட்காருங்கன்னு சொல்லிருக்காரு. நான் உங்களுக்குத்தான் சார் பரிமாற வந்துருக்கேன்'னாரு. 'நான் புரொடக்ஷன்ல தான் வேலை பார்க்குறேன். எனக்கு சாப்பிடுறது வேலை இல்ல. பரிமாறுறதுதான் வேலை'ன்னு அவரு சொல்றாரு. அப்படி சொல்லியும் ரஜினி அவரை விடல. 'நீங்கதான் சாப்பிடணும்'னாரு.
அப்படி நினைக்கக்கூடாது: ரொம்ப நேரம் வேணான்னதும் அவரு அழுதுட்டாராம். எதுக்காக என்னை உட்கார்ந்து நீங்க சாப்பிட சொல்றீங்கன்னு கேட்டாரு. அப்போ நடந்ததை சொல்றாரு. நான் ஒரு சாதாரண ஆர்டிஸ்ட்டா வரும்போது நீ சாதாரணமா நினைச்சது தப்பு. மனுஷன் இன்னைக்கு நடந்து வருவான். நாளைக்கு பிளேன்ல வருவான். எப்படி வேணாலும் வருவான். நீ அப்படி நினைக்கக்கூடாது. அந்த மாதிரி நினைக்கக்கூடாது.
நீ அன்னைக்கு அப்படிச் சொன்னது தப்பு. யாரையுமே அப்படி நினைக்கக்கூடாது. திங்கிற பொருள்தானே. யாரு கேட்டா என்ன? கொஞ்சம் எக்ஸ்ட்ரா கொடுத்தா என்ன குறைஞ்சிடப் போகுது? இனிமே யாருக்கும் அந்த மாதிரி செய்யாதீங்க அண்ணேன்னு மரியாதையா சொன்னாராம். அதே மாதிரி அவரு படத்துக்கு நாங்க போனா நான்வெஜ்ல என்னவெல்லாம் இருக்கோ அதெல்லாம் வந்துடும் என்கிறார் நடிகை மல்லிகா.