IND vs PAK: “பாகிஸ்தான் தான் ஜெயிக்கணும்” முன்னாள் இந்திய வீரரின் அதிர்ச்சி கருத்து..!!
SeithiSolai Tamil February 23, 2025 12:48 PM

சாம்பியன்ஸ் டிராபி 2017 இறுதிப்போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலுமே பாகிஸ்தான் வென்றது. இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து கோப்பையை தட்டி சென்றது. இறுதிப் போட்டியில் தோற்றத்திற்கு பழி தீர்க்கும் ஒரு போட்டியாக இன்று நடப்பு சாம்பியன் பாகிஸ்தானை இந்திய அணி எதிர்கொள்ள இருக்கிறது. இதுவரை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஐந்து முறை ஒருவரை ஒருவர் எதிர்கொண்டிருக்கும் இந்தியா பாகிஸ்தான் அணிகளில் பாகிஸ்தான் 3- 2 என முன்னிலை வகிக்கிறது.

2004 கங்குலி தலைமையிலு,ம் 2009ல் தோனி தலைமையிலும். 2017 கோலி தலைமையிலும் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் அதுல் வாசன், “இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் ஜெயிக்க வேண்டும். ஏனென்றால் அதுதான் தொடரை மேலும் சுவாரஸ்யமாக மாற்றும். பாகிஸ்தானை ஜெயிக்க விடவில்லை என்றால், நீங்க என்ன செய்வீர்கள்? என்ற கேள்விக்கு பாகிஸ்தான் வென்றால்தான் அதுஒரு போட்டியாக மாறும். இரு அணிகளுக்கும் சமமான சண்டையாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.