தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் மக்களுக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சாமானியர்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை அனைவருமே எதிர்கால தேவைகளுக்காக தங்களுடைய ஊதியத்திலிருந்து ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மக்களின் சேமிப்பு மனப்பான்மையை அதிகரிக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் மூத்த குடிமக்களுக்காக எல்ஐசி நிறுவனம் சிறப்பான பென்ஷன் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது எல்ஐசி கொண்டு வந்துள்ள ஸ்மார்ட் பென்ஷன் திட்டம் என்பது மூத்த குடிமக்கள் தங்களுடைய ஓய்வு காலத்தின் போது நிலையான வருமானம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு பெறுவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ள திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் இணைய குறைந்தபட்ச தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் முதல் உச்சவரம்பாக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ள முடியும்.
நிபந்தனை மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ எடுத்துக் கொள்ளக்கூடிய வசதியும் இந்த திட்டத்தில் உள்ளது. 18 வயது நிறைவு பெற்ற யார் வேண்டுமானாலும் இந்த ஓய்வூதிய திட்டத்தில் தனிநபராகவோ அல்லது கூட்டு நபராகவோ சேர்ந்து பயன்பெறலாம். மேலும் ஒரு முறை இந்த முதலீட்டுத் தொகையை தேர்வு செய்துவிட்டால் பிறகு மாற்ற முடியாது என்பதை கருத்தில் கொண்டு பாலிசிதாரர்கள் கவனமாக தேர்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.