இண்டிகோ விமான நிறுவன ஊழியருக்கும், பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. ஒரு பயணி டெல்லியில் இருந்து இண்டிகோ விமானத்தில் பெங்களூருக்கு பயணித்துள்ளார். பெங்களூரில் இறங்கிய பிறகு தனது உடைமைகள் சேதமடைந்திருப்பதை கண்டு அந்த பயணி அதிர்ச்சியடைந்தார். இதனால் வீடியோ எடுத்து கொண்டே விமான நிறுவன ஊழியரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது வீடியோ எடுத்தது தொடர்பாக பயணிக்கும், விமான நிறுவன ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வீடியோவை பயணி சோசியல் மீடியாவில் பதிவேற்றம் செய்தார். பயணிகளின் உடைமைகளை இப்படித்தான் கையாளுவீர்களா என கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் வீடியோ வைரலானதால் இண்டிகோ நிறுவனம் பயணியிடம் மன்னிப்பு கேட்டது. மேலும் குறிப்பிட்ட பயணிக்கு சில கூடுதல் சலுகைகள் தருவதாகவும் உறுதி அளித்துள்ளது.