தக்காளி துண்டுகளை வெட்டி மசாஜ் செய்தால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?
Top Tamil News February 23, 2025 10:48 AM

பொதுவாக சிலர்  உடலில் தீக்காயம் ஏற்பட்டு அந்த இடத்தில் தழும்புகள் உண்டாகும் .இந்த தழும்புகள் புண் ஆறினாலும் மறையாமல் இருக்கும் இந்த தழும்பு மறைய ஆயின் மென்டுகளை விட ,இயற்கை வைத்தியம் உள்ளது .அவற்றில் சிலவற்றை பார்க்கலாம் .
1.அந்த தழும்பு உள்ள இடத்தில் ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயில் கொண்டு மசாஜ் செய்தல் அந்த தழும்பு மறைந்து விடும் .
2.மேலும் பால் கொண்டு குளிப்பதற்கு பத்து நிமிடத்திற்கு மசாஜ் செய்யலாம் .அப்போது நாளடைவில் அந்த தழும்பு மறைந்து விடும் .மேலும் சில இயற்கை வைத்ய முறைகளை பார்க்கலாம்


3. எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்
4.கற்றாழையில் உள்ள  ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும்.
5. தக்காளி துண்டுகளை வெட்டியோ அல்லது அதன் சாற்றையோ தழும்பு உள்ள இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து வந்தால், தழும்புகள் நாளைடைவில் மறைந்து விடும்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.