நடிகை விஜயலட்சுமி மாதந்தோறும் சீமான் தனக்கு 50,000 ரூபாய் பணம் கொடுத்தார் என்று நேற்று வீடியோ வெளியிட்டு இருந்தார். அதாவது உண்மையை வெளியே சொல்ல கூடாது எனக் கூற சீமான் தனக்கு பணம் கொடுத்ததாக விஜயலட்சுமி கூறினார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் கூறியதாவது, 15 வருஷத்துக்கு முன்னாடி குடும்பத்தோடு சாகப் போகிறோம் என்று அந்த பொண்ணு உதவி கேட்டுச்சு. அதனால் நான் என் தம்பிகளிடம் கூறி ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கூறினேன். அவர்கள் ஏதோ சில மாதங்கள் மாதந்தோறும் 50 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பினார்கள். உதவின்னு கேட்டதால செஞ்சி தொலச்சது. மேலும் மற்றபடி அந்த பொண்ணுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று சீமான் கூறினார்.