இந்தியாவின் புகழ்பெற்ற பாடகி ஸ்ரேயா கோஷல் இந்தி மொழியை தாய்மொழியாக கொண்டவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என எந்த மொழியில் பாட வேண்டும் என்றாலும் எல்லாவற்றையும் அசால்டாக பாடி முடிப்பவர். தற்போது இவர் சினிமாவில் பாடலை பாடுவதை தாண்டி இசைக்கச்சேரிகளிலும் அதிகமாக பாடல் பாடி வருகிறார். தொடர்ந்து நிறைய இசைக்கச்சேரிகள் நடத்திவரும் இவர் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில் ஒரு ஐட்டம் பாடலை பாடியதற்காக வருத்தப்படுகிறேன் என்று கூறியுள்ளார். அதாவது, “அக்னி பாத் படத்தில் இடம் பெற்ற சிக்னி சமேலி என்ற ஐட்டம் பாடலை சிறு குழந்தைகள் கூட பாடலின் அர்த்தம் என்ன என்று தெரியாமல் பாடுகிறார்கள், பாடல் நன்றாக இருப்பதாக என்னிடமே சொல்கிறார்கள். யாராவது இவர் இவ்வாறு கூறினால் எனக்கு சங்கடமாக உள்ளது. இந்த பாடலை பாடியதற்காக வெட்கப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.