ஓய்வு பெறும் பாலச்சந்திரன்; சென்னை வானிலை மையத்தின் புதிய தலைவராக அமுதா நியமனம் - யார் இவர்?
Vikatan March 01, 2025 02:48 AM

இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று ஓய்வு பெறுகிறார். புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி அமுதா நாளை பொறுப்பேற்கிறார்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஏழு மண்டல வானிலை ஆய்வு மையங்களில் ஒன்று சென்னை வானிலை ஆய்வு மையம். இந்த மையமானது தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் வானிலை சம்பந்தப்பட்ட செயல்பாடுகளை கவனித்துக் கொள்கிறது.

பாலச்சந்திரன்

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் நூற்றாண்டுகளை கடந்தது. தென்னிந்தியாவில், ஐதராபாத், பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள மூன்று வானிலை ஆய்வு மையங்கள் சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இவருக்கு பிறகு புதிய தலைவராக அமுதா நாளை பொறுப்பேற்கிறார்.

அமுதா

34 ஆண்டுகளாக வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றி வரும் அமுதா, வடகிழக்கு பருவமழை தரவுகளை ஆராய்ந்து அதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகிறார் அமுதா என்பதும் குறிப்பிடத்தக்கது.!

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.