ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். படத்திற்கு இசை ஜீவி பிரகாஷ். படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முதலில் இந்த படத்திற்கு இசையமைக்க இருந்தவர் தேவி ஸ்ரீ பிரசாத். அவருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடைப்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக தேவி ஸ்ரீ பிரசாத் படத்திலிருந்து விலகினார்.
அதன்பிறகு தான் ஜிவி பிரகாஷ் படத்திற்குள் வந்தார். ஜிவி பிரகாஷ் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் இணைகிறார். ஏற்கனவே கிரீடம் படத்தில் இவர்தான் இசையமைத்திருந்தார். அந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். அதன் பிறகு குட் பேட்அக்லி திரைப்படத்தில் அஜித்துடன் இணைகிறார் ஜி.வி பிரகாஷ். அதனால் தன்னுடைய கரியர் பெஸ்ட் இசையை கண்டிப்பாக கொடுப்பேன் என தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார் ஜி.வி பிரகாஷ்.
அதோடு ரசிகர்களும் இவரை டேக் செய்து தரமான சம்பவத்தை செய்ய தயாராகுங்கள் என ஜிவி பிரகாசுக்கு கூறி வருகின்றனர் .படத்தில் திரிஷாவின் அறிமுக வீடியோ மற்றும் டீசர் அறிவிப்பு வீடியோ என இரண்டு வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் த்ரிஷா ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். டீசர் அறிவிப்பு வீடியோவில் ரசிகர்கள் சில பல விஷயங்களை கண்டுபிடித்து அதை எப்போதும் போல டீ கோடிங் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் படத்தின் டீசர் என்று வெளியாகி இருக்கிறது. ஆதிக் தான் எப்படிப்பட்ட அஜித் வெறியன் என்பதை டீஸரிலேயே காட்டியிருக்கிறார். விதவிதமான கெட்டப்பில் அஜித் மாஸாக நடித்திருக்கிறார். ஒரு பக்கம் மார்க் ஆண்டனி பட பின்னணியில் படம் கலர்புல்லாக இருக்கிறது. தர லோக்கலாக இறங்கி முழுக்க முழுக்க ரசிகர்களுக்காக இறங்கி நடித்திருக்கிறார் அஜித்.
அஜித் நடித்து சமீபத்தில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் ஓரளவு சுமாரான வரவேற்பை பெற்றது. இரண்டு வருடங்களுக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் விடாமுயற்சி படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனால் குட் பேட் அக்லி படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு திரும்பியுள்ளது. ஆதிக் இயக்கும் படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பும் இருக்கிறது.