நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராக இருக்கிறார். இதனால் அங்கு தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதாவது சீமான் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டபோது போது போலீசார் மீது தாக்குதல் நடத்தி பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் சீமான் தற்போது காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வர இருப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி 360 டிகிரி கேமராக்கள் கண்காணிக்கும் வகையில் மொபைல் கேமரா கண்ட்ரோல் யூனிட் அமைக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் நடந்தால் டிரோன்கள் மூலமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வளசரவாக்கம் காவல் நிலையம் அமைந்துள்ள ஸ்ரீதேவி குப்பம் சாலையின் இரு மார்க்கத்திலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இணை ஆணையர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நடிகை விஜயலட்சுமி சீமான் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கருக்கலைப்பு செய்ய சொன்னதாக கூறிய வழக்கில் 12 வாரத்திற்குள் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சீமானிடம் போலீசார் நேரில் விசாரணை நடத்த இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.