நாம் தமிழர் கட்சியின் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது விஜயலட்சுமி வழக்கு தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி வன்புணர்வு செய்தால்தான் அது பாலியல் பலாத்காரம். ஒரு பெண் விருப்பம் சார்ந்து படுத்தால் அதனை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள். கிட்டத்தட்ட 15 வருடங்களாக என்னையும் என் குடும்பத்தையும் அந்த பெண்ணை வைத்து என்னையும் என் குடும்பத்தையும் என் குடும்பத்தை சார்ந்தவர்களையும் கற்பழிக்கிறீர்கள் வன்புணர்வு செய்கிறீர்கள். எங்க மனநிலை எப்படி இருக்கும். ஒரு பொம்பள அவ சொல்றான்னு நீ என்ன நடந்ததுன்னு தெரியாம நீ பாட்டுல ஏதேதோ சொல்ற.
நான் ஒரு அரசியல் தலைவர் ஆக இந்த இடத்தில் இருக்கும் போது என்னை பார்த்து பயந்தால் இப்படி பேசுவியா. நான் ஒரு சாதாரண திரைப்பட இயக்குனர் மார்க்கெட் எதுவும் இல்லாமல் சாதாரணமாக இருந்தால் என்னை பார்த்து இப்படி பேசுவீர்களா? நான் இருக்கும் இடம் உங்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதால் தான் இப்படி எல்லாம் பேசுகிறீர்கள். நான் இருக்கும் இடம் உங்களுக்கு அச்சத்தையும் நடுக்கத்தையும் தருவதால் தான் இப்படி எதற்கெடுத்தாலும் அந்த பொம்பளையை கூட்டிட்டு வந்து பேசுகிறீர்கள். முதலில் அந்த பொண்ணையும் என்னையும் நேருக்கு நேர் வைத்து விசாரணை நடத்தினால் இந்த பிரச்சனை அரை மணி நேரத்தில் முடிந்து விடும். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு வரும் என்று கூறினார்.