நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் அக்கட்சியின் ஆண்டு விழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா சென்னை மாமல்லபுரம் ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ரிசார்டில் சமீபத்தில் நடைபெற்றது. அதில், “தமிழக வெற்றி கழகம் என்பது ஏழை எளிய மக்களுக்கான கட்சி. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது. ஏன் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் அரசியலுக்கு வரக்கூடாதா. இங்கு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான் பெரிய அளவில் சாதிக்கிறார்கள். முன்பெல்லாம் பண்ணையார்கள் தான் பதவியில் இருப்பார்கள்.
ஆனால் தற்போது காலம் மாறிவிட்டது. பதவியில் இருப்பவர்கள் தான் பண்ணையர்களாக மாறிவிட்டார்கள் என்று கூறினார். இந்நிலையில் வலைப்பேச்சு அந்தணன் பேசுகையில், “விமர்சனம் செய்வது என்று முடிவு செய்து விட்டால் ஓப்பனாக கட்சியின் பெயரை சொல்லித்தான் விமர்சிக்க வேண்டும். இவர் மேலோட்டமாகவும், மறைமுகமாகவும் விமர்சனம் செய்கிறார். முக்கியமாக பண்ணையார் என்று சொல்லியிருக்கிறார். இவரையே பலரும் பனையூர் பங்களாவின் பண்ணையர்த்தான் என்று கூறுகிறார்கள்” என்று பேசியுள்ளார்.