நயன்தாராவிற்கு வில்லன் அருண் விஜயா…? இது லிஸ்ட்லயே இல்லையே…
Tamil Minutes March 01, 2025 12:48 AM

நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற நடிகை ஆவார். 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அதே ஆண்டு சந்திரமுகி திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்றார்.

தொடர்ந்து வல்லவன், கஜினி, ஆதவன், பாஸ் என்கிற பாஸ்கரன், இது கதிர்வேலன் காதல் போன்ற முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானார் நயன்தாரா. தொடர்ந்து கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், நெற்றிக்கண் போன்ற நாயகன் இல்லாத நாயகி கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து அதில் வெற்றி பெற்று புகழின் உச்சிக்கு சென்றார் நயன்தாரா.

இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் மிகவும் வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் தற்போது நயன்தாராவுக்கு வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. இப்போதெல்லாம் அருண் விஜய் பலதரப்பட்ட வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதே போல் மூக்குத்தி அம்மன் – 2 படத்தில் இவர்களின் காம்போ எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்கள் எதிர்பார்போடு இருக்கின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.