பகீர்... கல்யாணமாகி ஒரு மாசம் கூட ஆகல... கணவனுக்கு கூல்டிரிங்சில் விஷம் கலந்து கொடுத்த மனைவி!
Dinamaalai March 01, 2025 01:48 AM


தமிழகத்தில் கடலூர் மாவட்டம் அயன் கருவேப்பம்பாடி கிராமத்தில் வசித்து வருபவர்   சுந்தரமூர்த்தி. இவர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புகார் மனு ஒன்றினை அளித்தார். அந்த மனுவில் சுந்தரமூர்த்தியின் மகன் கலையரசனுக்கு  ஜனவரி 26 ம் தேதி ஷாலினி என்ற பெண்ணுடன் பெரியோர்கள் சம்மதத்துடன் திருமணம், நடைபெற்றுள்ளது.

ஆனால் பெண் ஷாலினிக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், அவர் வேறு ஒருவரை காதலிப்பதாகவும் திருமணம் முடிந்து முதல் இரவின் போது கூறியுள்ளார்.  இதனால் கலையரசன் ஷாலினியை அவர்களின் வீட்டிற்கு அனுப்பி விட்டனர். ஆனால்  மீண்டும் அந்த பெண்ணின் சொந்தக்காரர்கள் எல்லாம் சில நாட்களில் சரியாகி விடும் என்று கூறி விட்டு விட்டு சென்றுள்ளனர்.


இந்நிலையில் பிப்ரவரி  20ம் தேதி ஷாலினி கூல்ட்ரிங்க்ஸில் விஷம் கலந்து கொடுத்து விட்டார் என கூறப்படுகிறது. தற்போது கலையரசன்  புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக கடலூர் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஷாலினி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலையரசனின் பெற்றோர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். திருமணம் ஆகி ஒரு மாதத்திற்கு உள்ளாக கணவனுக்கு கூல்டிரிங்சில் விஷம் கொடுத்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.