தமிழ் சினிமாவில் பிரேமம் படத்தின் மூலமாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அந்த படத்தின் வெற்றியின் மூலமாக தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நடிக்க தொடங்கினார். தெலுங்கில் கார்த்திகேயா-2, 18 பேஜஸ், தில்லு ஸ்கொயர் போன்ற படங்களிலும் நடித்தார். சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்கப்பட்டது.
இவர் தற்போது பரதா என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் வெளியிட்டு தேதியானது விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிகை சமந்தா நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே அனுபமா மற்றும் சமந்தா இணைத்து நடித்த “அ ஆ” படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.