தமிழ் சினிமாவில் 90களில் முன்னணியாக வலம் வந்தவர் சௌந்தர்யா. இவர் கார்த்திக் நடித்த பொன்னுமணி என்ற படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்டவர்களோடு ஹீரோயினாக நடித்துள்ளார். இவர் கடந்த 2004 ஆம் வருடம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் சௌந்தர்யாவின் மரணம் விபத்து இல்லை என்று ஆந்திராவைச் சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் நடிகை சௌந்தர்யாவின் மரணம் விபத்தில்லை என்றும், சௌந்தர்யாவுக்கு சொந்தமாக ஆறு ஏக்கர் நிலத்தை நடிகர் மோகன் பாபு கேட்டதாகவும் அதனை கொடுக்க மறுத்ததால் தான் திட்டமிட்டு ஹெலிகாப்டர் விபத்து போல ஏற்படுத்தி சௌந்தர்யா மற்றும் அவருடைய சகோதரரை கொன்றதாக தெரிவித்துள்ளார்.
சௌந்தர்யா மறதி மோகன் பாபுவிற்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவல் குறித்து அவருடைய கணவர் ரகு விளக்கம் அளித்துள்ளார் . அதாவது, “மோகன் பாபுவும், எங்களுடைய குடும்பத்தினரும் நெருங்கிய நட்பு உணர்வோடு பழகி வருகிறோம். சௌந்தர்யாவின் மரணத்தில் மோகன் பாபுவுக்கு எந்த தொடர்பும் இல்லை. என்னுடைய மனைவி மரணம் மற்றும் மோகன் பாபு தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை உடனே நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.