ஏமாற்றிய மேனேஜரை பழி தீர்க்க முடிவெடுக்கும் மீனா… ஜெயிப்பாரா? இல்ல இதுவும் பல்ப் ஆகுமா?
CineReporters Tamil March 13, 2025 07:48 PM

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட்டின் தொகுப்புகள்.

மீனா வீட்டில் அழுதுக்கொண்டு இருக்க முத்து கால் செய்கிறார். அவரிடம் அழுகாமல் அமைதியாக பேசுகிறார் மீனா. இன்னைக்கு காசு கொடுக்கலை. நாளைக்கு வர சொல்லி இருக்காங்க என்கிறார். வந்தோன வேலை செய்தவங்களுக்கு கொடுத்திடு என்கிறார் முத்து.

மீனா கண்ணீருடன் சரியென்கிறார். பின்னர் காலையில் மீனா தன் வீட்டில் இந்த விஷயத்தினை சொல்கிறார். எல்லாரும் வருத்தப்படுகின்றனர். சத்யாவை அழைத்துக்கொண்டு போய் இன்ஸ்பெக்டரிடம் பேச அவரும் இந்த பத்திரத்தில் இருப்பதை தான் நம்புவார்கள் என்கிறார்.

தான் கண்டிப்பாக காசு வாங்கவில்லை என அவர் கூற பத்திரம் கையெழுத்து போடும் போது படித்து இடம் இருப்பதை கவனித்து போட வேண்டும் என அறிவுரை சொல்கிறார். மீனா வீட்டில் சமைக்க வேண்டும் என நினைத்து கிளம்பி விடுகிறார்.

வீட்டில் விஜயா மீனாவின் வாயில் இருந்து விஷயத்தை பிடுங்கலாம் என யோசிக்க அவர் கடைசியில் என்ன எதுனு உங்க டான்ஸ் ஸ்டூடண்ட் சிந்தாமணியை கேளுங்க. அவங்க விளக்கமா சொல்லுவாங்க என்கிறார். பின்னர் சமைக்க போக பைனான்சியர் கால் செய்கிறார்.

மண்டபத்தில் இருந்து இன்னும் பணம் வரவில்லை. வந்தவுடன் தந்துவிடுவதாக சொல்ல அவர் என்ன உன்னை அப்படியா நினைச்சேன் என சொல்கிறார். மீனா அவரை சமாளித்து வைக்கிறார். அப்போது அண்ணாமலை வந்து கடைக்காரர் கொடுத்த கிழிந்த நோட்டை ஏமாற்றி அவரிடமே கொடுத்ததாக சொல்கிறார்.

உடனே மீனாவிற்கு ஒரு ஐடியா வருகிறது. மேனேஜரை அவர் வாயிலேயே உண்மையை சொல்ல வைக்க முடிவெடுக்கிறார். ஸ்ருதி மற்றும் சீதாவிடம் தன் ஐடியாவை சொல்லிக்கொண்டு இருக்கிறார். இந்த பிரச்னையில் இருந்து மீனா தப்பிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.