போலீஸ் கைவிட்டதால் தானே களத்தில் இறங்கும் மீனா.. ஸ்ருதி உதவியுடன் பக்கா பிளான்..!
Tamil Minutes March 13, 2025 07:48 PM

இதனை அடுத்து, தினமும் பூ கொடுக்க செல்லும் இன்ஸ்பெக்டரிடம் இது குறித்து கூறலாம் என்று முடிவெடுக்கிறார். இன்ஸ்பெக்டர் வீட்டிற்குச் மீனாவும் அவரது சகோதரரும் செல்கிறார்கள். இன்ஸ்பெக்டர் டாக்குமெண்ட்டை படித்து பார்த்துவிட்டு, “பக்காவாக எழுதி இருக்கிறது, இதை சட்டரீதியில் எதுவும் செய்ய முடியாது. ஆனால், நான் முடிந்தளவு விசாரிக்கிறேன்,” என்று கூறி கைவிடுகிறார்.

இதனை அடுத்து, சோகத்துடன் வெளியே வரும் மீனா, “இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் மிகப்பெரிய முட்டாளாகி விட்டேன்,” என்று புலம்புகிறார். அவரது தம்பி, அவருக்கு ஆறுதல் கூறுகிறார். அப்போது கூட, முத்து பேசும்போது, “பணம் நாளைக்கு கிடைத்துவிடும்,” என்று சமாளிக்கிறார்.

இந்த நிலையில், வீட்டிற்கு வரும் மீனாவை விஜயா சீண்டி பார்க்கிறார். “ஏன் இப்படி இருக்கிறாய்? உடம்புக்கு நல்லாதானே இருக்கிறது?” என்று கேட்கிறார். உடனே மீனா “உடம்புக்கு எல்லாம் நல்லாதான் இருக்கிறது, மனசுக்கு தான் சரியில்லை. எனக்கு என்ன நடந்திருக்கும் என்பதுதான் உங்களுக்கு தெரிந்திருக்குமே! சிந்தாமணி சொல்லியிருப்பார்களே. ஒருவேளை சொல்லவில்லை என்றால், அவரிடம் போன் போட்டு கேட்டுப் பாருங்கள். எல்லாவற்றையும் சொல்வார்,” என்று பதிலளிக்கிறார். இதைக் கேட்டு விஜயா அதிர்ச்சியாகிறார்.

அப்போது, அண்ணாமலை, தன்னை ஒரு கடைக்காரன் ஏமாற்றியதாகவும், அவனது பாணியிலேயே அவனை ஏமாற்றினேன் என்றும் கூறுகிறார். உடனே மீனா நாமும் மண்டப மேனேஜரை ஏமாற்றி தான் படத்தை வாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.

நாளைய எபிசோடில் ஸ்ருதியிடமும் சீதாவிடமும் மேனேஜரிடம் இருந்து பணத்தை வாங்க, “என்னிடம் ஒரு பக்கா பிளான் இருக்கிறது,” என்று மீனாகூறுகிறார். அந்த பிளான் என்ன என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.